/* */

அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.6.63 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று, விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த 5,893 தேங்காய்கள், குறைந்த விலையாக 4 ரூபாய் 75 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 25 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு ஒரு கிலோ 64 ரூபாய் 09 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 51 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 77 ரூபாய் 11 பைசா முதல் 85 ரூபாய் 17 பைசா வரையிலும், 41 மூட்டைகள் எள் ஒரு கிலோ 106 ரூபாய் 19 பைசாவிற்கும், 113 மூட்டைகள் மக்காச்சோளம் ஒரு கிலோ 22 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையானது. இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 182.53 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 9 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...