/* */

ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? பிரமாணப் பத்திரத்தில் தகவல்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.583 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்

HIGHLIGHTS

ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? பிரமாணப் பத்திரத்தில் தகவல்
X

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.583 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தற்போது வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார்.

அவர் குறிப்பிட்டு உள்ள சொத்து விவரத்தில், கையிருப்பில் ரூ.10 லட்சம், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சம், வங்கி கணக்குகளில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500, மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரம், 10.1 கிலோ தங்க நகை, மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகை 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன உள்ளன என குறிப் பிட்டுள்ளார்.

அதன்படி, அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்து, ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்து மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்தும், மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்