/* */

ஈரோடு: மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு: மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு பயிற்சி
X

சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பேசிய போது எடுத்த படம்.

சித்தோட்டில் மண்டல அலுவலர்கள், வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் 2024யையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களை தேர்தல் நாளன்று பாதுகாப்பாக வைக்கும் பணிக்கான பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து தொகுதிகளில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியின் போது, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வாக்கு சேகரிப்பு மையத்தில் தேர்தல் நாளான 19ம் தேதி தேர்தல் முடிவுற்ற பின்னர் தேர்தல் தொடர்பான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் சட்டபூர்வமான பதிவுகள் அடங்கிய பொருட்களை வாக்கு சேகரிப்பு மையத்தில் பெறுவதற்காக வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அறிவுரைகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்/ வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள், பாதுகாப்பு அலுவலரின் பணிகள், வாக்குச் சாவடித் தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் (இவிஎம்) கையாளும் முறை, வாக்குப்பதிவிற்கு முன்தினம் செய்யப்பட வேண்டியவை, வாக்குச்சாவடிக்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள், வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை, ஒத்திகை வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடங்கியவுடன் செய்ய வேண்டியவை, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொதுவாக நிகழக்கூடிய குறைபாடுகளும் அவற்றை சரிசெய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல் எளிதான முறையில் சுமூகமாக நடைபெற மண்டல அலுவலர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பினை சரியாக கவனித்து அதனடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த பயிற்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 15 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!