/* */

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

ஈரோடு பேருந்து நிலையம்  (கோப்பு படம்)

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வெளியூரில் உள்ள வாக்காளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழக சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக நாளை 17ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 18ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களுக்கு ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 April 2024 10:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?