/* */

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பஞ்சப்படி வழங்காத திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

திண்டுக்கல் மின் வாரிய அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டு குழு சார்பாக மத்திய அரசு அறிவித்த பஞ்சப்படி உயர்வினை திமுக அரசு ஒர் ஆண்டுக்கு நிறுத்தி வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்த்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்தையா தெரிவிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் பஞ்சப்படி அறிவிக்கின்றதோ அதேபோன்று தமிழக அரசும் வழங்கி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி அறிவித்தவுடன் மாநில அரசும் வழங்கி வந்தது.

ஆனால், தற்போது ஆட்சி புரிந்து வருகின்ற திமுக அரசு இந்த வருடம் பஞ்சப்படி கிடையாது. அடுத்த வருடம் தான் என அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்செயல் மின்வாரிய ஊழியர்களின் வயிற்றில் அடித்தது போலாகும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களை வஞ்சிப்பதை திமுக அரசு நிறுத்தி விட்டு உடனடியாக பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் பாலாஜி பிரபு, ஹிந்து மஸ்தூர் சபா சங்க மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மத்திய அலுவலக சங்க செயலாளர் சத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.


Updated On: 16 Aug 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...