/* */

சாமந்தி பூ விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி

Samanthi Flower Rate Today-சாமந்தி பூக்களின் விளைச்சல் அதிகரித்த நிலையில், எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனா்.

HIGHLIGHTS

Samanthi Flower Rate Today-தர்மபுரி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பயறு வகை மற்றும் காய்கனி சாகுபடி பாதிக்கப்படுவதால், மலா் சாகுபடி மீதான ஆா்வம் விவசாயிகளிடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில், சம்பங்கி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சாமந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலா் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

பொம்மிடி, ரேகடஹள்ளி, விழுதிபட்டி, கதிரிபுரம், மோட்டாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி பூ , அளரி, காக்கடா சாகுபடி அதிகமாக உள்ளது. பொம்மிடி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சாமந்தி, கடந்த மூன்று நாட்களாக அறுவடையாகி வருகின்றன. இந்தப் பூக்கள் அனைத்தும் சென்னை, பெங்களூர், சேலம் ‌உள்ளிட்ட மார்கெட் டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பருவமழை செழிப்பாக பெய்து பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், மலா்களைப் பறிப்பதற்கான ஊதியம் மிகவும் அதிகரித்துள்ளது. தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணிக்குள் பூக்களை பறித்து சந்தைக்கும்,வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், கூடுதல் ஊதியம் தருகின்ற நிலை உள்ளது.

சாமந்தி பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் சந்தைகளில் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஒரு கிலோ சாமந்தி 300 ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது கிலோ 30 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிக்க பட்டுள்ளதால் பூக்கள் விலை சரிந்துள்ளது.இதனால் உரம் மற்றும் வேலை ஆட்களின் ஊதியம் போன்றவை உயா்ந்துள்ள இந்த காலத்தில், பூக்கள் விலை மிகவும் சரிவைத் தொடும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படுவதற்காக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 April 2024 6:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...