/* */

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
X

பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் மோகன்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ராகி, சாமை, துவரை, மக்காச்சோளம், பருத்தி, பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கவும், விவசாயத்தில் நிலைபெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் வரும் 31ம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

மக்காச்சோளத்திற்க்கு ஒரு ஏக்கருக்கு 450, ரூபாயும், சாமைக்கு 120, ரூபாயும், ராகிக்கு 196, ரூபாயும்,துவரைக்கு 266, ரூபாயும், பருத்திக்கு 590, ரூபாயும், பங்கு தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் முகமையின் மூலம் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் நகல் மற்றும் நடப்பிலுள்ள வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், உரிய பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

விதைப்புக்கு முன்னரே பயிர் காப்பீடு செய்ய வி.ஏ.ஓக்களிடமிருந்து விதைப்பு சான்று பெற்று காப்பீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டும், உழவன் செயலியில் இருந்தும் தகவல்களை பெறலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Aug 2021 6:55 AM GMT

Related News