/* */

அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்..

Theerthamalai Temple-அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக திருத்தேர் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

Theerthamalai Temple
X

Theerthamalai Temple

அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக திருத்தேர் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது.

Theerthamalai Temple-தருமபுரி மாவட்டம், அரூர்}கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் 13}ஆவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் செய்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம் கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜைகளை முடித்தார். அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும்.

இந்த மலை தீர்த்தகிரி என்றழைக்கப்படும் புண்ணிய மலையாகும். ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து, பாவ விமோச்சனம் பெற்றத் தலம் இந்த திருத்தலமாகும். தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் திருத்தலமாகும். இக்கோயில் மாசிமக தேர்திருவிழா பிப்ரவரி 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிகளின் திருவீதி உலா, ராவனேசுவர வாகன திருவீதி உலா, குத்துவிளக்கு பூஜை, பிரகார உற்சவம், காமதேனு வாகன திருவீதி உலா, சுவாமி திருக்கல்லாயணம், சுவாமி ரதம் ஏறுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனையெடுத்து, இன்று பிற்பகல் 2 மணி அளவில், மேள தாளம் முழங்கிட அருள்மிகு விநாயகர், வடிவாம்பிகை உடனுறை தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகள் தனித்தனியாக மூன்று தேர்களில் எழுந்தருளினர். அப்போது சுவாமிகளின் தேர்மீது பக்தர்கள் உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களை தூவி வழிபட்டனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை வலம் வந்த தேர்கள் மாலையில் நிலையை வந்தடைந்தன.

இந்த தேர்திருவிழாவில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அரூர் மற்றும் ஊத்தங்கரையில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த விழாவில், அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், கோட்டாட்சியர் வே.முத்தையன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், செயல் அலுவலர் ந.சரவணக்குமார், திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 4:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?