/* */

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி மூட்டை ஏலம்

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 950 மூட்டை பருத்தி ரூ.35 இலட்சத்திற்கு ஏலம்-கடந்த வாரத்தை விட பருத்தி வரத்து குறைந்து ரூ.7 இலட்சம் குறைவாக ஏலம்.

HIGHLIGHTS

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் பருத்தி மூட்டை ஏலம்
X

ஏலத்திற்கு வந்திருந்த பருத்தி மூட்டைகள்.

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட்கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 320 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 320 பருத்தி விவசாயிகள் எடுத்து வந்த 950 பருத்தி மூட்டை ரூ.35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், ரூ.9,509 முதல் ரூ.11,859 வரையிலும், வரலட்சுமி எம்சிஎச் ரகம் குவிண்டால் ரூ.9,509 முதல் 11,159 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து குறைந்து. ஆனால் விலை அதிகரித்து விற்பனையானது. கடந்த சில வாரங்களில் 1100 மூட்டை வரை வந்திருந்த பருத்தி, தற்போது குறைந்துள்ளது. இந்நிலுயில் கடந்த வாரம் ரூ.42 இலட்சத்திற்கு விற்பனை பருத்தி, இந்த வாரம் ரூ.7 லட்சம் குறைவாக விற்பனையானது. மேலும் அடுத்த வாரம் பருத்தி குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 29 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!