/* */

காது கேட்காத குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தருமபுரி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக காது கேட்காத குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காக்கிலர் உள்ளமைப்பு கருவி பொறுத்தம்.

HIGHLIGHTS

காது கேட்காத குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
X

காது கேட்காத குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காக்கிலர் உள்ளமைப்பு கருவி பொறுத்துவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் அமுதவல்லி, துறைத்தலைவர் செந்தில்குமார்.

தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், காது முற்றிலும் கேட்காத ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காக்கிளர் இம்ப்ளான்ட் கருவி அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை துறை மூலம் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்காக பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தையை தேர்வு செய்தனர்.

இதற்காக மொரப்பூர் அடுத்த எலவடை கிராமத்தைச் சேர்ந்த சங்கர்-நர்மதா தம்பதிகளின் ஆண் குழந்தையை முறையாக பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை மூலம் காக்கிளர் இம்ப்ளான்ட் உள்ளமைப்பு (காதுக்குள்) கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்து, குழந்தைக்கு செவி திறன் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டு கழித்து குழந்தைக்கு செவிதிறன் கிடைத்துள்ளதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களுக்கும், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் செந்தில்குமார், கடந்த ஜூலை 17ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் காக்கிளர் இம்பிளான்ட் (காதுக்குள்) கருவிகள் பொருத்தம் அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இதில் இதில் கருவி மட்டுமே 7 லட்சம் ரூபாய்.

ஆனால் இந்த அறுவை சிகிச்சையை நமது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தற்பொழுது இந்த அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருந்து வருகிறோம். இந்த அறுவை சிகிச்சை பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஆறு வயதிற்குள் அடையாளம் காணப்பட்டு அறுவை சிகிச்சை செய்தால் பலன் அளிக்கும். இதற்கான அனைத்து வசதிகளும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 6 Aug 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...