/* */

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

விஷ்ணு தீபத்தை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
X

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் முதல்நாளில் அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-வது நாளான நேற்று தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகள் செய்து விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் மாலையில் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்றிரவு சாமிக்கு சிறப்பு உபகார பூஜைகளும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Updated On: 21 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  2. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  3. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  4. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  6. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  9. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!