/* */

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர் உத்தரவு

பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்  உத்தரவு
X

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தருமபுரி கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில், அனைத்து வர்த்தகம் மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி -ன்படி வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தேர்தல் அன்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்திலிருந்து எந்த பிடித்தமும் செய்யக்கூடாது. அப்படி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, தருமபுரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 9442271235, 9994799224 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...