/* */

தருமபுரியில் பிளஸ் 2 தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தருமபுரியில் பிளஸ் 2 தேர்வு மையங்களை கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு
X

பிளஸ்2 தேர்வு மையத்தினை கலெக்டர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சின தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையங்களை இன்று (05.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் இதுகுறித்து தெரிவித்தபோது

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்புக் கல்வியாண்டில் (2021-22) மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் இன்று (05.05.2022) தொடங்கி 28.05.2022 வரை தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலும் இன்றைய தினம் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி , 3 உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் ,1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 10,151 மாணவர்களும், 10,196 மாணவியர்களும் என மொத்தம் 20,347 மாணவ, மாணவியர்களும், 681 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 21,028 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

இத்தேர்வுப் பணிகளில் 1280 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 79 முதன்மை கண்காணிப்பாளர்களும், 4 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 79 துறை அலுவலர்களும், 4 கூடுதல் துறை அலுவலர்களும், 128 பறக்கும் படைகளும், 22 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவிக்காக 66 சொல்வதை எழுதுபவர்களும் (Scribe), 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மொத்தம் 1682 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் இடைநிலை பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நாளை 06.05.2022 தொடங்கி 30.05.2022 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி , 5 உண்டி, உறைவிட பள்ளி , 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுய நிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 11,895 மாணவர்களும், 11,033 மாணவியர்களும் என மொத்தம் 22,928 மாணவ, மாணவியர்களும், 860 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23,788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வுப் பணிகளில் 1623 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 99 முதன்மை கண்காணிப்பாளர்களும், 99 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படைகளும், 29 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவிக்காக 155 சொல்வதை எழுதுபவர்களும் 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மொத்தம் 2127 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு (11-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் 10.05.2022 தொடங்கி 31.05.2022 வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 3 உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் , 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 11,850 மாணவர்களும், 11,235 மாணவியர்களும் என மொத்தம் 23,085 மாணவ, மாணவியர்களும், 87 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 23,172 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வுப் பணிகளில் 1280 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 79 முதன்மை கண்காணிப்பாளர்களும், 4 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 79 துறை அலுவலர்களும், 4 கூடுதல் துறை அலுவலர்களும், 128 பறக்கும் படைகளும், 22 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவிக்காக 120 சொல்வதை எழுதுபவர்களும் 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மொத்தம் 1736 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கும், நாளை தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு அரசு பொது தேர்விற்கும், 10.05.2022 அன்று தொடங்க உள்ள 11-ஆம் வகுப்பு அரசு பொது தேர்விற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களும் இத்தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார்.

Updated On: 5 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  2. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  3. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  4. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  5. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  6. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  7. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  8. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  9. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  10. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப