/* */

சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் - தர்மபுரி கலெக்டர்

தர்மபுரி யில் சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்

HIGHLIGHTS

சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் - தர்மபுரி கலெக்டர்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்; நாளை (15.08.2021) 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, கொரோனா நோய் தடுப்பு மற்றும் இதர பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் எனவும், இச்சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை உள்ளுர் தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து கண்டு களித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்