/* */

எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் என்னும் இயந்திரம் வைத்துள்ள கட்சி பாஜக: திமுக எம்பி சாடல்

பாஜகவிற்கும், பாமகவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் என்னும் இயந்திரம் வைத்துள்ள கட்சி பாஜக: திமுக எம்பி சாடல்
X

தருமபுரி‌ அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை தருமபுரி எம்பி செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி‌ அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.11.50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே தொப்பூர், பெரும்பாலை பகுதியில் உள்ள மகளிர் பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு பள்ளிக்கல்வி இடை நின்றல் அதிகரிப்பதற்கு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணமாக அமைந்துள்ளது. இடைநிற்றலை தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. பெண்கள் பள்ளி கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி எம்பி, டிவிட்டா் எம்பி என்று குறிப்பிட்டிருக்கிறார் என்ற நிருபரின் கேள்விக்கு, டிவிட்டா் மூலமாக நல்ல விஷயங்கள் செய்ய முடிகிறது. என் பாராளுமன்ற செயல்பாடு, மாநில அளவிலும், மத்திய அளவிலும், முதல் இடத்தில் இருக்கின்றேன் ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களைக் காட்டிலும் முதலிடத்தில் இருக்கின்றேன். பாஜக எம்பி, எம்எல்ஏ செயல்பாடுகளும் தர்மபுரி எம்பி அதன் செயல்பாடும் பொருத்தி பார்த்தால் முதலிடத்தில் வருவேன். எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி பணம் என்னும் எந்திரத்தை வைத்திருக்கின்ற கட்சி தான் பாஜக. எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் என்னும் எந்திரம் எதற்கு?. என்னை இருபத்தி மூன்றாம் புலிகேசி என்று பேசியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தை ஒப்பிட்டு பாராட்டியிருக்கிறார் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி என்றார்.

தர்மபுரியில் 289 பூத் குரும்பட்டியான் கொட்டாய் பகுதியில் பேசிய அண்ணாமலை தோ்தலில் இந்த பூத்தில் 90% பாஜக வாக்கு பெற்றுள்ளதாக பேசியிருக்கிறார். அந்த வாக்குச்சாவடியில் பாஜகக்கு ஒரே ஓட்டுதான் பெற்றுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சி கோட்டையாக உள்ள இடம். பாஜகவிற்கும், பாமகவிற்கு வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

மாவட்டத்தில் உள்ள ஆறு மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் உள்ளது இன்னும் ஆறு மாதங்களில் இப்பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகிராமங்களும் சாலை வசதி பெற்ற கிராமங்களாக இருக்கும் என்று தெரிவித்தார். அதியமான்கோட்டை மேம்பால பணிகள் குறித்து ஏற்கனவே டெல்லியில் உள்ள அலுவலரிடம் பேசியதாகவும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்