/* */

கொடநாடு வழக்கு: சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு

கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடத்துவதற்கு சயான் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

HIGHLIGHTS

கொடநாடு வழக்கு: சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு
X

கொடநாடு எஸ்டேட் (பைல் படம்)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், இன்று (11ம் தேதி) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அவர் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயான் கேரளாவில் மற்றொரு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் இன்று கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சயானிடம் வேறு ஒரு நாளில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Updated On: 14 Jan 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!