/* */

தமிழகத்தில் அட்ரஸே இல்லாத 23 கட்சிகளுக்கு மாநில தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி

tnadu electn commission strict order தமிழகத்தில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்த கட்சிகள் அனைத்தும் கணக்கு வழக்கினை காட்ட வேண்டும்.அதுபோல் காட்டாத கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில்  அட்ரஸே இல்லாத 23 கட்சிகளுக்கு  மாநில தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி
X

தமிழக மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், சென்னை (பைல்படம்)


tnadu electn commission strict order

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் செயல்படாத லட்டர்பேடு அரசியல் கட்சிகள் பல உள்ளன. இக்கட்சிகள் தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஒரு சிலர் தங்களின் சுயஆதாயத்துக்காக கட்சி என்று ஒன்று துவங்கி பெயரை பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை பதிவு செய்த 23 கட்சிகளின் ஆபீ்ஸ் எங்கு உள்ளது என்பதே தெரியாமல் தவித்துவருகின்றனர் அதிகாரிகள். இது ஒரு பெரிய தலைவலியாக தொடர்வதால் இதற்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது தேர்தல் கமிஷன்.

tnadu electn commission strict order


tnadu electn commission strict order

யார் அரசியல் கட்சியைத் துவக்கினாலும் சட்டப்படி முறைப்படி தேர்தல் கமிஷனில் பெயரினை பதிவு செய்ய வேண்டும். மேலும்இதுபோல் துவங்கும் கட்சிகள் 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தனிசின்னமும் வழங்க வாய்ப்புள்ளது. தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள விபரங்கள் படி தேர்தலின் போது குறிப்பிட்ட எம்எல்ஏ மற்றும் எம்.பிக்களைப் பெறும்அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனானது அங்கீகாரத்தினை அளிக்கும்.

தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு நிரந்தரமாக தேர்தல் சின்னத்தினை தேர்தல் கமிஷன் ஒதுக்கும். தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணி்க்கையானது 233 ஆகும். இத்தனை கட்சிகளில் நன்றாக செயல்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக்கை என்பது ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளதால் மற்ற கட்சிகள் செயல்படாமல் பதிவினை மட்டும் செய்துள்ளதாகவும் இதில் ஒருசில கட்சிகள் தேர்தல் நேரங்களில் மட்டுமே செயல்படுகிறது.

தேர்தல் கமிஷனில் பதிவு செய்த கட்சிகள் நன்கொடை வசூலிக்கின்றன. கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாலும் வசூல் வேட்டைக்காகவே ஒரு சிலர் கட்சி ஆரம்பித்து பதிவு செய்து வைத்துள்ளனர்.

இவ்வாறு நன்கொடைகளைப் பெறும் அரசியல் கட்சி எதுவாக இருந்தாலும் முறையான கணக்கு வழக்கினைப் பராமரிப்பதோடு அதற்கான வருமான வரி கணக்கினையும் உரிய முறையில் உரிய கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுபோல் உத்தரவிட்டும் எந்தவித பதிலும் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டு அக்கட்சியிடம் இருந்து உரிய விளக்கம் பெறப்படுகிறது.

tnadu electn commission strict order


மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி சத்யபிரதாசாகு அ,படம்: வாக்களித்தோருக்கு விரலில்மைஇட்டது.(பைல்படம்)

tnadu electn commission strict order

23 கட்சிகளின் நிலை?

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 அரசியல் கட்சிகளில் 23 கட்சிகளின் நிலை என்ன ?என்பதே தெரியாத வகையில் உள்ளதால் அதிகாரிகள் குழப்பமடைந்து வருகின்றனர். பதிவு செய்யும்போது கட்சி செயல்படும் முகவரியினை எழுத வேண்டும். அவ்வாறு எழுதிய அட்ரஸில் இக்கட்சிகள் அனைத்தும் செயல்படவில்லை என தெரிகிறது. கட்சியின் கணக்குகளை சமர்ப்பிக்கும்படி அக்கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசானது திரும்பி வந்துவிட்டது.

பதிவு செய்யப்பட்ட முகவரியில் உரிய கட்சிகள் செயல்படாதததைக் கருத்தில் கொண்டு அவ்வாறுள்ள கட்சிகள் அனைத்துமே விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

பதிவு பெற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனால் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய விளக்கத்தினை அளிக்க வேண்டும். அவ்வாறு நோட்டீஸ் பெறாத கட்சிகள் அனைத்தையும் தேர்தல் கமிஷனுக்கு ரத்து செய்ய அதிகாரம்இல்லாத காரணத்தினால் செயல்படாத கட்சிகள் அனைத்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கமிஷனின் இன்டர்நெட்டில் இக்கட்சிகளின் பட்டியல் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழகத்தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Nov 2022 4:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு