/* */

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி

திருவொற்றியூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி
X

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர்  மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர், கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பகுதி அதிமுக செயலாளருமான கே குப்பன் தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு, நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாய், அரிசி, பால், ரொட்டி, வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

முன்னதாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பரமசிவம், சிவில் முருகேசன், கார்த்திக், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  3. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  4. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  6. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  7. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  8. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  9. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்