/* */

மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இளைஞரைப் போல் பாடுபட கூடியவர் நல்லக்கண்ணு எனவும் அவரை இளைஞராகவே பார்ப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நல்லகண்ணு விற்கு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97 ஆவது ஆண்டு அமைப்பு தினம் என்பதால் நல்லகண்ணுவின் பிறந்த தினம் மற்றும் கட்சியின் 97வது அமைப்பினர் இரண்டையும் ஒன்றிணைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் சுப்பராயன் மற்றும் வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வருகை தந்து அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர், நல்லகண்ணு பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்தும் தெரிவித்து, அவரை வாழ்த்துவதில் தாம் பெருமை அடைவதாகவும் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் சேகர்பாபு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ஆண்டை நிறைவு செய்து 97 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதாகும் அதைப்போல் மூத்த தலைவர் நல்லகண்ணு வும் 96 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அன்றுதான் நல்லகண்ணுவும் பிறந்ததாகும் கட்சி தொடங்கிய தினம் அன்று நல்லகண்ணு பிறந்தது அபூர்வமானது என கூறினார்.

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எனவும் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.

எந்த லட்சியத்திற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது அந்த லட்சியம் நிறைவேற இந்த நாளில் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இன்றளவும் வழிநடத்திச் செல்வது மூத்த தலைவர் நல்லகண்ணு எனவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொடர்வதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக முத்தரசன் கூறினார்.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உள்ளிட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய அமைப்புகளை பாஜக சீர்குலைப்பதாகவும். இப்படிப்பட்ட மக்கள் விரோத போக்கை எதிர்ப்பதில் திமுக இன்றளவும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முற்போக்கு அணி மீண்டும் தொடர வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமுயற்சி எடுத்து வருவதாகவும் அதுவே விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சு வெளிப்படுத்தியதாக கூறினார். அனைவரையும் அணைத்து செல்லும் முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டிருப்பதாகவும் அவரது முயற்சி வெற்றி பெற வேண்டும் எனவும் கூறினார்.

வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிடக்கூடாது அவர்களை ஒன்றிணைத்து வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் என்பதையே திருமாவளவன் வெளிப்படுத்தி இருந்ததாகவும் முத்தரசன் தெரிவித்தார். தங்களுக்கு நிரந்தர எதிரி இருப்பதாகவும் அது பாஜக எனவும் எனவே அவர்களை எதிர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை என முத்தரசன் கூறினார்.

அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளும் நல்லகண்ணு பிறந்த தினமும் ஒன்று என்பது பெருமை கூடிய விசயம் பொருத்தமானது என தெரிவித்தார். விழும் இலை மக்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் தியாக வாழ்வாகவே வாழ்ந்தவர் நல்லகண்ணு எனவும் கூறினார். நல்லகண்ணு நூறாண்டுகள் வாழ வேண்டும் என நெஞ்சார வாழ்த்துவதாக தெரிவித்தார்.

காங்கிரசை விட்டு விடாமல் காங்கிரசை உள்ளடக்கிய அணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைக்கவேண்டும் என திருமாவளவன் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் ஆமோதிருப்பது ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து நல்லகண்ணுவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்றைக்கு வாழும் தலைவர்களில் அதிக நாள் சிறையில் இருந்தவர் நல்லகண்ணு என தெரிவித்தார். அரசால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவே நல்லகண்ணுவின் குரல் இருந்துவருவதாக வைகோ புகழாரம் சூட்டினார். எளிமையும் நேர்மையும் கொண்ட நல்லகண்ணு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் , பொதுவுடமை இயக்கத்திற்கு வலிமையும் தமிழகத்திற்கு மறுமலர்ச்சியும் வருவதற்கு நல்லகண்ணு துணை என்றும் தேவை என கூறினார். தன்னையும் திருமாவளவன் போலவும் இருப்பவர்களுக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக இருப்பதாகவும் கூறி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் திருமாவளவனின் கருத்தே தனது கருத்து எனவும் வைகோ தெரிவித்தார்.

Updated On: 26 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...