Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
நடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு கோவிட் தடுப்பூசி
சென்னையில் நடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS

நடமாடும் வாகனம்.
சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 ஆயிரத்து 477 பேருக்கும்,கோவேக்சின் 610 என இதுவரையில் 3 ஆயிரத்து 87 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.