/* */

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

-தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அதிரடி

HIGHLIGHTS

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
X

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

"கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இண்ட்கோ செர்வின் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்.பணியிடம் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

பணியிடம் மாற்றப்பட்டு, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழலில் பொறுப்பு வகித்து வந்த கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌சேனா ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசு கருவூலத்துறையின் ஆணையர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஹிதேஷ்குமார் மக்வானா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளராக பொறுப்பு வகித்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக பொறுப்பு வகித்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, வேளாண் உற்பத்தி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சுற்றுலா, கலாச்சார துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய கழக நிர்வாக இயக்குனர் கிரியோஷ்குமார் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் கழகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறையின் சிறப்புச் செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா ஐ.ஏ.எஸ். போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ்., கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். எரிசக்தி துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோ- ஆப்டெக்ஸ் துறையின் முதன்மை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு நிர்வாக சீர்த்திருத்த துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, டெக்ஸ்டைல் துறையின் முதன்மை செயலாளர் ஷாம்பூ கல்லோலிகர் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லால்வேனா ஐ.ஏ.எஸ். மாற்றுத்திறனாளி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலராக இருந்த ஹான்ஸ்ராஜ்வர்மா ஆகியோருக்கு பணியிடம் எதுவும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. மேலும் காத்திருப்போர் பட்டியலில் பீலா ராஜேஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 May 2021 2:56 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது