/* */

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர் பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழுவின் அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன்னாள் அதிமுக அமைச்சர் பேட்டி
X

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழு அதிமுக பிரதிநிதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்தித்து பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக

இன்று காலை அதிமுக சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி புறப்பட்டார். அப்போது விமானநிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரே இன்று சந்திக்கின்றோம்.

அதிமுக தமிழகத்துக்கு என்றைக்குமே முழு ஆதரவாக இருக்கும். விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கை அதிமுக முழு ஆதரவு அளிக்கும்

மேகதாது அணை விவகாரத்தில் திமுக திசை மாறாமல், சரியான பாதைக்கு செல்லும் என்று நம்பிக்கை இருக்கின்றது. திமுக சரியான பாதைக்கு செல்லும்போது எங்களது முழு ஆதரவு உண்டு.

மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைப்பது போன்ற விஷயங்களெல்லாம் போராடி பெற்றது அதிமுக அரசுதான். மேகதாது அணை விஷயத்திலும் தமிழகத்துக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

Updated On: 16 July 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!