/* */

சிட்லபாக்கம் ஏரி கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி

சிட்லபாக்கம் ஏரி கரை கிராம நத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணியில் பட்டா நிலங்களையும் அளப்பதாக பொதுமக்கள் புகார்

HIGHLIGHTS

சிட்லபாக்கம் ஏரி கரை பகுதியில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி
X

பட்டா நிலங்களையும் அளப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏரி ஆக்கிரமிப்பில் உள்ள 450 வீடுகளை அகற்றுவதற்காக வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயலுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிகளை அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய் துறையினர் பொதுப்பணித்துறையினர் காவல்துறையினர் இணைந்து அளவீடு செய்யும் பணியை இன்று காலை தொடங்கினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தங்களிடமுள்ள பத்திரங்களை பட்டா விபரங்களை கேட்ட பிறகு அளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வருவாய்த் துறையினர் தொடர்ந்து அளவீடு செய்ததால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அளவீடு செய்ய கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் காவல் உதவி ஆனையர் சீனிவாசன் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை செய்தார்.

இதனை தொடர்ந்து தொடர்ந்து அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒருதலைப்பட்சமாக அளவீடுகள் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கிராம நத்தம் மற்றும் ஏரி ஆக்கிரமிப்புகள் மட்டுமே அளவீடு செய்யப்படுவதாக தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தெரிவித்தார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது

Updated On: 22 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை