/* */

சிறந்த நகை வடிவமைப்பு; விருது பெற்ற போத்தீஸ் ஸ்வர்ண மஹால்

Pothys Swarna Mahal -சிறந்த நகை வடிவமைப்புக்கான 'பிரைடல் கோல்ட் ஜுவல்லரி ஆப் தி இயர் 2022' விருதை, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

சிறந்த நகை வடிவமைப்பு; விருது பெற்ற போத்தீஸ் ஸ்வர்ண மஹால்
X

சிறந்த நகை வடிவமைப்புக்கான ‘பிரைடல் கோல்ட் ஜுவல்லரி ஆப் தி இயர் 2022’ விருதை, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் வென்றுள்ளது.

Pothys Swarna Mahal -தீபாவளி நெருங்க, நெருங்க ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இச்சூழலில், 'பிரைடல் கோல்ட் ஜுவல்லரி ஆப் தி இயர் 2022' விருதை போத்தீஸ் ஸ்வர்ண மஹால் பெற்றுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நிறுவனம், 'ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா' இந்த மாதம் மும்பையில் நடத்திய சிறந்த வடிவமைப்பிற்கான விருது வழங்கும் நிகழ்வில், தங்கள் வடிவமைப்பை காட்சிப்படுத்தினர். அதே போல் இந்தியா முழுவதிலும் இருந்து, 200 க்கும் மேற்பட்ட நகைக்கடைக்காரர்கள் தங்கள் புதிய வடிவமைப்பு நகை படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

நகை வணிகத்தை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. போத்தீஸ் ஸ்வர்ண மஹால் உரிமையாளர் ரமேஷின் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால், சொந்த ஊரின் பெருமையையும் தமிழகத்தின் பண்பாட்டையும் கொண்டு சேர்க்கும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் வடிவமைப்பை, மூன்று கிலோ தங்கம் கொண்டு, 10 நகை செய்பவர்கள் இணைந்து 365 நாட்கள், 3285 மணி நேரத்தில் கோவிலில் தங்கி, அதனை வரைந்து வடிவமைத்தனர்.

கண்காட்சியில் சிறந்த வடிவமைப்பாக அங்கீகரித்து, 'பிரைடல் கோல்ட் ஜுவல்லரி ஆப் தி இயர் 2022' விருது வழங்கி சிறப்பித்தது.

இந்த வடிவமைப்பில் கோவில் கட்டிடக்கலையில் உள்ளது போல், ஆண்டாளின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி, கோவில் வடிவமைப்பு, அணிகலனில் மின் கலன்களும், விளக்குகள் பொருத்தப்பட்டு ரிமோட் மூலம் இயக்கும் வகையில் உள்ளது. ஆரம், ஒட்டியாணம் ஆகிய நகை பகுதிகள் உயிரோட்டமாக இயங்கி நகரும் போது, பிண்ணனி இசை ஒலிக்கும், குறிப்பாக விஷ்ணு பெருமாள் உள்ளே ஓய்வெடுப்பதை காட்டும் வகையில், முழு கோபுரமும் கம்பீரமாக மேலே செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


போத்தீஸ் ஸ்வர்ண மஹால் உரிமையாளர் 'போத்தீஸ்' ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்னுடைய சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். நான் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போன்று நகையை வடிவமைத்து கண்காட்சியில் காட்சிப்படுத்தினோம் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில், 365 நாட்களில் 10 பொற்கொல்லர்கள் 3,285 மணி நேரம் இந்த வடிவமைப்பை உருவாக்கினர். அகில இந்திய அளவில்சிறந்த வடிவமைப்பாக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் சிறந்த நகை விளம்பரமாகவும் நானும், என்னுடைய மகளும் நடித்த ஸ்வர்ண மஹால் விளம்பரமும் முதலிடம் பிடித்தது. இந்த வருடம் இரட்டை சந்தோஷமாக இது அமைந்துள்ளது.

சிறந்த நகை வடிவமைப்பு, சிறந்த விளம்பரம் ஆகிய 2 விருதுகள் போத்தீஸ் ஸ்வர்ணமஹாலுக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இதனை ஊழியர்கள், வாடிக்கையாகர்களோடு பகிர்ந்து கொள்வதாக கூறினார். வாடிக்கையாளர்கள் பார்வைக்காக, கடையில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Oct 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?