/* */

அரியலூரில் 151 பயனாளிகளுக்கு ரூ.62.96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்டமக்கள் தொடர்பு முகாமில் 151 பயனாளிகளுக்கு ரூ.62.96 இலட்சம் மதிப்பில் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்

HIGHLIGHTS

அரியலூரில் 151 பயனாளிகளுக்கு ரூ.62.96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.வளவெட்டிக்குப்பம் மாந்தோப்பு ஊராட்சி/எந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் .அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை இன்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.வளவெட்டிக்குப்பம் மாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் .அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை இன்று நடைபெற்றது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி பேசியதாவது: தமிழகஅரசின் உத்தரவின்படி திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அதன் தகவல் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் தொடர்பு முகாம் என்பது அனைத்துத் துறை அலுவலர்களும் சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு கண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதே மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்..

அதனடிப்படையில் இன்றைய தினம் உடையார்பாளையம் வட்டம், த.வளவெட்டிக்குப்பம் மாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்காக ஏற்கெனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டு, 119 மனுக்கள் ஏற்கப்பட்டும், 19 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்முகாமில் பொதுமக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 151 பயனாளிகளுக்கு ரூ.62,96,622 மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட வழங்கல் அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

12-வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், பெற்றோர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கின்றேன். இதன்படி, திறந்த வெளியில் மலம் கழித்தலை அரியலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பொதுமக்களுக்கு தனிநபர் இல்லக் கழிவறைகள் அரசின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட போதிலும், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் 12-வயதிற்குட்பட்ட பெண் குழந்தை கழிவறையை பயன்படுத்தும் பொழுது, அந்த குடும்பத்தில் அனைவரும் கழிவறையை பயன்படுத்தும் நிலை உருவாகும். பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ்வதுடன், சுகாதாரத்தை பேணி பாதுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும். ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு குறித்து குழந்தைகளை பரிசோதனை செய்தபோது, ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் கண்டறியப்பட்டு, அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, தற்பொழுது ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. தாய்மார்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவு எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து தெரியும். எனவே, தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை வழங்கி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

தற்பொழுது மழைக்காலம் துவங்க உள்ளதால், மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. தங்களது வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். இதன்படி, வீடு, தெரு, கிராமம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்படி பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது இல்லங்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தங்களது பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், குப்பைகளை பொது இடங்கள் மற்றும் நீர்;நிலைகளில் போடுவதை தவிர்த்து, அதனை சேகரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வழங்கும் பொழுது அதற்குரிய தொகை ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும். இதனை பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.

இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலி;ருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். நெடுஞ்சாலைகளில் வேளாண் பொருட்களை காயவைத்தல் உள்ளிட்ட பிற பணிகளை வேளாண் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சாலைகளில் சேமித்து வைக்கப்படும் வேளாண் பொருட்களால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேளாண் பொதுமக்கள் இதனை தவிர்க்கமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் பொருட்களை காயவைக்க விவசாயிகள் உலர் கலங்களை பயன்படுத்த வேண்டும்.

இப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி.

முன்னதாக, த.வளவெட்டிக்குப்பம் மாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கிப் பள்ளி அருகில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ப.துரை, ஊராட்சி மன்றத் தலைவர் ஐஸ்வர்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Oct 2022 1:08 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?