/* */

ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு சென்றால் பறிமுதல் : தேர்தல் அலுவலர் தகவல்

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் – பறக்கும் படையினர் தீவிரம்.

HIGHLIGHTS

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை 13.09.2021 அன்று வெளியிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் பார்வையாளராக பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிறப்புச் செயலர் ஏ.சம்பத் தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 154 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 359 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 2679 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 15 ம் தேதி முதல் 22-09-2021 வரை பெறப்பட்டது.இதில் 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 156 மனுக்கள், 154 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1015 மனுக்கள், 359 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு 2022 மனுக்கள், 2679 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 9809 மனுக்கள், ஆக மொத்தம் 3208 பதவிகளுக்கு 13002 மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 சுழற்சிகளில் 24 மணி நேரமும் ஊரக உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் போக்குவரத்து வாகனங்கள் சோதனை செய்தல், தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், இலத்தூர், மதுராந்தகம், காட்டாங் கொளத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் புனித தோமையார் மலை வட்டாரங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமுல்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரூ 50.000-ற்கு மேல் எந்தவொரு ஆவணமும். ஆதாரமின்றி வேட்பாளர்களோ அவரின் முகவர்களோ அல்லது தொடர்பான நபரோ மற்றும் எவருமோ எடுத்துச் செல்வது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

போஸ்டர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள். ரூ 10.000-கும் மேற்பட்ட பரிசு பொருட்கள், போதைப் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தேர்தலின்போது அனுமதியின்றி வாகனங்கள் பயன்படுத்துவதையும் இக்குழுவினர் கண்காணித்து, உரிய ஆவணங்கள் இல்லாதவற்றை பறிமுதல் செய்வார்கள்.

Updated On: 24 Sep 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!