/* */

டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று கிடந்த 5 சிறிய அளவிலான சாமி சிலைகள்

கல்லாத்தூர் தண்டலை டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று கிடந்த 5சிறிய அளவிலான சாமி சிலைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று கிடந்த 5 சிறிய அளவிலான சாமி சிலைகள்
X

சிறிய அளவில் செம்பு உலோகத்திலான 5 சாமி சிலைகள்

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன்(38) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது டீக்கடை பெஞ்சில் கேட்பாரற்று பச்சைநிறத்தில் கேரி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது உள்ளே சிறிய அளவில் செம்பு உலோகத்திலான 5 சாமி சிலைகள் 1 தூவகாலும் இருப்பதைக் கண்ட வேல்முருகன் அதனை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதில் கருடபகவான் அம்மன், பெருமாள், நடராஜர், ஆஞ்சநேயர்,உள்ளிட்ட 5 சிறிய அளவிலான சாமி சிலைகள், தூவகால் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சிலை தடுப்பு தனிப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிலைகளை ஆய்வுசெய்து கருவூலத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.அதன்படி சிலைகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்த சிலை குறித்து திருச்சி சிலை தடுப்பு தனிப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத சிலைகளாகவும் இதன் உரிமையாளர் யார்? என்று தெரியாமல் இருப்பதாலும் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம் மேலும் இது குறித்து உரிய விசாரணை செய்து சிலைகளை தன்னுடையது என வந்து கேட்பவரிடம் உரிய ஆவணங்களை பெற்று அவரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஏதேனும் கோயில்களில் திருடப்பட்டதா? அல்லது வீடுகளில் பூஜைக்காக வைத்திருந்து அதனை திருடிக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுள்ளனரா? என போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Updated On: 25 Nov 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை