குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல்பெற்று தமிழகத்திற்கு நீட்தேர்விற்குவிலக்கு

திமுக சார்பில் கனிமொழியின் குடும்பத்திற்கு 10லட்சம் நிதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல்பெற்று தமிழகத்திற்கு நீட்தேர்விற்குவிலக்கு
X

நீட்தேர்வு சரியாக எழுதாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கனிமொழி

சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகள் கனிமொழி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எழுதியுள்ளார். இந்நிலையில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி வேதனைப்பட்டாராம்.மன உளைச்சலில் இருந்த மகளை இவரது தந்தை தேற்றியுள்ளார். எனினும். மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வுக்கு எதிரான மசோநா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களை மாணவ-மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மனதளவில் மாணவ மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். திமுக சார்பில் கனிமொழியின் குடும்பத்திற்கு 10லட்ச ரூபாயினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Updated On: 14 Sep 2021 11:34 AM GMT

Related News