/* */

நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திருக்கவேண்டும்: கலெக்டர்

அரியலூர் மாவட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் மாவட்டகலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திருக்கவேண்டும்: கலெக்டர்
X

 அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

அரியலூர் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்திருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒமைக்ரான் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கூறியதாவது :

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வந்ததால், முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உருமாறிய கொரோனா தொற்று வகை (ஒமிக்ரான்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது முந்தைய கரோனா தொற்றை விட அதிக தொற்றுத் தன்மை உள்ளதாகவும், டெல்டா வைரஸ் தொற்றை விட தாக்கம் கூடுதலாக இருக்கலாம் எனவும் தெற்காசிய பகுதிகள் மற்றும் இந்திய நாட்டில் இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, வணிகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி, உணவகங்கள், வாடகை ஊர்தி உரிமையாளர்கள் தங்களது பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான, முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தம், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்திட வேண்டும்.

திரையரங்கு வளாகத்தை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பவர்களை மட்டும் தியேட்டர்களுக்கு அனுமதிக்க வேண்டும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்சிகளில் 100 நபர்களுக்கு மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவ, மாணவியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் வணிகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கு விடுதி உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் உணவக, வாடகை கார் உரிமையாளர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...