/* */

குழந்தைகளுக்குஎதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுகூட்டம்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

குழந்தைகளுக்குஎதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுகூட்டம்
X

அரியலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்தியமண்டல காவல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.


அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பாக அரியலூர் அன்னலெட்சுமி திருமண மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட திட்ட அலுவலர் சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், ரைஸ் தொண்டு நிறுவன இயக்குநர் அருள்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

திருச்சி மத்தியமண்டல காவல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு தலைமையேற்று சிறப்புரையாற்றினார். காவல்துறை தலைவர் சிறப்புரையாற்றும்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அதற்கான தண்டனைகள் குறித்தும் பாலியல் வண்கொடுமை குறித்தும் பொதுமக்களிடம் தெளிவாக. பெற்றோர்கள் குழந்தைகளிடம் நட்பு ரீதியாக பழகி நல்லது தீயவைகளை எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக பெண்களும் ஆண்களும் சிறார்களும் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.

Updated On: 31 July 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...