/* */

அமாவாசை சென்டிமெண்ட்: வேட்புமனுக்களை வாங்க அரசியல் கட்சியினர் ஆர்வம்

இன்று அம்மாவாசை மதியம் 1.59க்கு தொடங்கி நாளை மதியம் 12.02வரை நீடிப்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

HIGHLIGHTS

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு, அதனடிப்படையில் வேட்புமனுத்தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். ஏழாம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பிற விரும்புவோர்கள் வாபஸ் பெறலாம். இதனால் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளின் 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 490 பேரூராட்சிகளின் 7,621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 12,838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்பாளர்கள் பிப்ரவரி 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள். தாக்கல் செய்யும் வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வேட்புமனுத்தாக்கல் நடைபெறவில்லை. மேலும் வேட்பாளர்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று வேட்புமனுவைகூட வாங்கவில்லை.

இந்நிலையில் இன்று அமாவாசை தினம். மதியம் 1.59க்கு தொடங்கும் அம்மாவாசை நாளை மதியம் 12.02வரை நீடிக்கிறது. இரண்டு நாட்கள் அம்மாவசை நீடிப்பதால் அரசியல் கட்சியினர் இன்றையதினத்தில் தங்களுடைய வேட்புமனுக்களை அலுவலகத்திற்கு சென்று வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் அரசியல்கட்சிகளின் தலைமையும் இன்று மதியத்திற்குள் கூட்டணி இடங்களை ஒதிக்கீடு செய்வதை இறுதி செய்து, தங்களுடைய கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று தங்களுடைய வேட்புமனுவை தயார் செய்வதற்கான ஆயுத்தப்பணிகளை தொடங்கிவிட்டனர். தங்களுடைய நகராட்சி, பேருராட்சியில் உள்ள நிலுவைத்தொகைகளை செலுத்தி வருவதோடு, மதியத்திற்கு மேல் வேட்புமனுக்களை வாங்கி, இன்றே பூர்த்தி செய்து, நாளை தாக்கல் செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.

அம்மாவாசை அரசியல் சென்டிமேட் இன்று இனிதே தொடங்கியுள்ளதால், இன்று தொடங்கி ஐந்து தினங்களுக்கு பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

Updated On: 31 Jan 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!