/* */

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்; வெற்றிக்கனியை பறித்தது இந்தியா

நேற்றைய நாக்பூர் டி 20 கிரிக்கெட் போட்டியில், 20 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை விளாசித்தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு வெற்றிக்கனியை பறித்து தந்தார். 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்து, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுகளை துவம்சம் செய்த ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் குதுாகலித்தனர்.

HIGHLIGHTS

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்; வெற்றிக்கனியை பறித்தது இந்தியா
X

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால், நாக்பூர் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. மைதானத்தில், மழை நீர் காரணமாக, ஈரப்பதம் அதிகம் இருந்ததால், 'டாஸ்' போடுவதில், போட்டியை துவங்குவதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக, தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் 2 ஓவர்கள் 'பவர் ப்ளே' என்றும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இன்னிங்கஸ்சுக்கும், 34 நிமிடங்கள் என முடிவு செய்யப்பட்டது.


இரவு 7:30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி, 9:30 மணிக்கு தாமதமாக துவங்கப்பட்டது. முன்னதாக, 9:15 மணிக்கு 'டாஸ்' போடப்பட்டது.

இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 'டாஸ்' வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, பும்ரா, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேட் மற்றும் ஆரோன் பின்ச்சின் அபாரமான ஆட்டத்தால் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 90 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஆரோன் பின்ச், 15 பந்துகளில் 31 ரன் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் அடங்கும். பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக மேத்யூ வேட், நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர் என விளாசி, 20 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அவுட் ஆகாமல் இருந்தார். மாக்சுவெல் ரன் எதுவும் எடுக்காமல், அக்சார் பட்டேல் வீசிய இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களில், ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில், ஹர்ஷல் பந்துவீச்சில், ஆஸ்திரேலிய வீரர்கள் 19 ரன்களை குவித்தால், ரன் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது.


இதனைத்தொடர்ந்து வெற்றிபெற 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா - கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஹேசல்வுட் வீச, ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து இரு இமாலய சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசியதன் மூலம் 174 சிக்சர்கள் விளாசி ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார். இதனால் ரோஹித் ஷர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்க வீரர்களாக, இன்னிங்ஸ்சை துவங்கிய ரோகித் சர்மா- ராகுல், ஒருமுனையில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார். இந்திய அணி 2.5 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் 10 ரன்களில் (6 பந்துகள்) ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோகித் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், ஜம்பா பந்துவீச்சில் போல்டாகி, ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.


இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதிலும், ரோகித் சர்மா அதிரடியை குறைக்கவில்லை. 6-வது ஓவரில் அவர் இரண்டு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட களத்தில் ரோகித்- தினேஷ் கார்த்திக் ஜோடி இருந்தனர். முதல் பந்தில் சிக்சர் விளாசிய கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரி விரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 4 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

டி 20 போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக, இரண்டு மணி நேரம் தாமதம் காறணமாக, 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. எனினும், காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றமடைய விடாமல், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் தங்களது வெற்றிக்காக, விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்திய அணி, வெற்றியை தக்கவைத்து, போட்டி தொடரில் தொடர்ந்து பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுதினம் 25ம் தேதி, அடுத்த போட்டி, ஐதராபாத்தில் நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அங்கு மூன்றாவது டி 20 போட்டியில் மோதுகின்றன.

Updated On: 25 Sep 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது