/* */

இருக்கன்குடி மாரியம்மன்- இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்

Irukkankudi-இரு கங்கைகள் இணையும் பகுதியில் அம்மன் குடியிருப்பதால் ‘இருகங்கைக்குடி’ என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம் காலப்போக்கில் மருகி ‘இருக்கன்குடி’ என்றானதாக சொல்லப்படுகிறது.

HIGHLIGHTS

இருக்கன்குடி மாரியம்மன்- இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்
X

இருக்கன்குடி

இருக்கன்குடி மாரியம்மன் சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் அமைந்துள்ளது

Irukkankudi-இருக்கன்குடி மாரியம்மன் தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இங்குதான் பல சிறப்புகளை கொண்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் இருக்கும் மாரியம்மன், சிவ அம்சமாகவே இருப்பதால், அம்மனுக்கு முன்பாக நந்தி வாகனம் இருக்கிறது. இங்கே சக்திக்குள் சிவன் அடங்கியிருப்பதாக ஐதீகம். கோவிலுக்கு தென்புறம் வைப்பாறும், வடபுறம் அர்ச்சுனன் ஆறும் ஓடுகிறது. இரு ஆறுகளும் கங்கைக்கு ஒப்பானவை என்று சொல்லப்படுகிறது.

இரு கங்கைகள் இணையும் பகுதியில் அம்மன் குடியிருப்பதால் 'இருகங்கைக்குடி' என்று அழைக்கப்பட்ட இந்த திருத்தலம் காலப்போக்கில் மருகி 'இருக்கன்குடி' என்றானதாக சொல்லப்படுகிறது. 'இடுக்கன்' எனப்படும் துன்பத்தை அகற்றும் அன்னை குடியிருக்கும் இடம் என்பதால் 'இடுக்கன்குடி' என்று பெயர்பெற்று, அதுவே 'இருக்கன்குடி' என்றானதாகவும் சொல்வார்கள்.

அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை பார்க்க இயலாது. பவுர்ணமி நாளில் நடைபெறும் அபிஷேகத்தை மட்டும் கண்குளிர கண்டு களிக்கலாம்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...