/* */

ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை, தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை..

Tirupur to Rameswaram Train-கோவை, திருப்பூர் வழியாக ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை, தினமும் செல்லும் சிறப்பு ரயிலாக மாற்ற வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

Tirupur to Rameswaram Train
X

Tirupur to Rameswaram Train

Tirupur to Rameswaram Train-கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், பாம்பன் வழியாக ராமேஸ்வரத்துக்கு, வாரந்தோறும் செவ்வாயன்று ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினமும் செல்லும் ரயிலாக இயக்க வேண்டும் என, பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து ராமேஸ்வரம் செல்ல, வாரத்துக்கு ஒரு ரயில் மட்டுமே உள்ளது. மதுரைக்கு ஓரிரு ரயில்கள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை சென்று அங்கிருந்து வேறு ரயிலில், பயணிகள் மாறி செல்கின்றனர். ராமேஸ்வரம் செல்லும் ரயிலை, தினந்தோறும் இயக்கினால், பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர, வசதியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையின் போதும், ஒருவாரம், பத்து நாட்கள் பயணமாக, யாத்திரை ரயில் இயக்கப்படுகிறது.இதில் பயணிக்க, பயணி ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது இயக்கப்படும் இந்த ரயிலில், கோவையில் இருந்து 165 ரூபாய், திருப்பூரில் இருந்து, 150 ரூபாய் மட்டுமே ராமேஸ்வரத்துக்கு கட்டணமாக வசூலிக்கப்படகிறது. செப்., 18ம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. 25ம் தேதி, மகாளய அமாவாசை. இந்நாளில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்த, கடலில் நீராட பக்தர்கள் பலரும் ராமேஸ்வரம் செல்வர். எனவே, வாராந்திர ரயிலை, தினமும் செல்லும் ரயிலாக இயக்க வேண்டும் என்பது, பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 9:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...