தெய்வீக மகிமை நிறைந்த மதங்களை கடந்து நின்ற ஷிர்டி சாய்பாபா வரலாறு

"சாய்" என்றால் பாரசீகத்தில் "சுவாமி" என்று பொருள். "பாபா" என்றால் இந்தியில் "அப்பா" என்று பொருள். இரண்டும் இணைந்து சாய் பாபா என்ற திருப்பெயரே நிலைத்து விட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தெய்வீக மகிமை நிறைந்த மதங்களை கடந்து நின்ற ஷிர்டி சாய்பாபா வரலாறு
X

ஷிர்டி சாய்பாபா

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு தெரியுமா ? ஷிர்டி சாய் பாபாவின் தாய் தந்தை யாவர் ? சொந்த ஊர் எது ? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை..

சாய் மகான் 1854 ஆம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை புரிந்தார். அதனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை..


சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். அவரிடம் இளைப்பாறும்படி பாபா கூறினார்.

அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த சுத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது.

மேலும் சில மாதங்களுக்கு முன் காணமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா சரியாக கூறினார்.. பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்..

சாந்த் பட்டேல், தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் பாபாவை தன் வீட்லேயே தங்க வைத்து உபசரித்தார்.. சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக ஷிர்டி வந்த போது, பாபாவையும் தன்னுடன் ஷிர்டிக்கு அழைத்து வந்தார்.

பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தை கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரி, அவரை சாயி என்று அழைத்தார்.

"சாய்" என்றால் பாரசீகத்தில் "சுவாமி" என்று பொருள். "பாபா" என்றால் இந்தியில் "அப்பா" என்று பொருள். இரண்டும் இணைந்து சாய்பாபா என்ற திருப்பெயரே நிலைத்து விட்டது..

சாய்பாபா ஷிர்டியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். ஷிர்டியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்ப மரத்தின் இலைகளில் அதன் இயல்பு கசப்பு சுவை மாறியது..

ஷிர்டி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார் ? என்று கேட்டார்கள்.. அதற்கு அவர், நானே அல்லா !, நானே சங்கரன் ! நானே ஸ்ரீ கிருஷ்ணர் ! நானே அனுமன் ! என்று கூறினார்.


ஆமாம் அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்.. பல ஆண்டுகள், ஒரு யோகியை போலவே வாழ்ந்த பாபா, பிச்சை எடுத்தே உண்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவ தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவை சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீக தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினர்.

கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானி பாபாவை சந்தித்து, பாபாவின் மகிமையை சோதித்தார். பாபா தன் உள்ளங்கையிலிருந்து கங்கையை பெருக செய்ய, கங்காகீர் தன் தவற்றை உணர்ந்தார்..

பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணையை கொடுத்து வந்தனர்.

ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.. பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகளை எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவை தேடி பக்தர்கள் வர தொடங்கினர்..

ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்து கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவை தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும், அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருக செய்தார் பாபா..

தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.. சிரிக்க சிரிக்க பேசி குழந்தைகளை மகிழ செய்தார். பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும்படி உற்சாகமூட்டினார்..

ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறாதாவர் பாபா.. ஒரு தாயை போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழுநோயாளிகள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி, அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்களையும், ஐயமற கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படைய செய்தார்.

பாபா மதங்களை கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார். மக்கள் அவரை சாய் மகாராஜ் என்று போற்றி கொண்டாடினர். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை) வும், ஸபூரி (பொறுமை) யும், ஆகும்..

தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் உதி ( விபூதி) யையே, பிரசாதமாக தந்து, அவர்களின் நோயை நீக்கியவர் பாபா. வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்..

துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார்..

சாய்மகான் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் ஸ்தூல உடலை உகுத்தார். உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்க பெற்றவர்களுக்கும், சாய்பாபாவை வழிபடும் பேறுகிட்டுகிறது.. !

ஷிர்டி சாய்பாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்:

1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.

9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது

Updated On: 22 July 2021 12:59 AM GMT

Related News

Latest News

 1. BJP
  பா.ஜ.க.வில் இணையும் மேலும் ஒரு தமிழ் நடிகை
 2. விழுப்புரம்
  உயிர் பலி கேட்கும் தேசிய நெடுஞ்சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
 3. ஈரோடு
  ஈரோட்டில் நிலத்தகராறில் தொழிலாளி வெட்டி கொலை; ஒரே குடும்பத்தில் 3 பேர்...
 4. ஆன்மீகம்
  thiruvannamalai temple history in tamil-திருவண்ணாமலை கோவில் வரலாறு...
 5. ஆன்மீகம்
  Kumbakonam temples list in Tamil கோவில் நகரமாம் கும்பகோணத்தில் இத்தனை...
 6. ஆன்மீகம்
  Navagraha temples in Tamil Nadu தமிழகத்தில் நவக்கிரக தலங்கள் எங்கே...
 7. தென்காசி
  வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வலியுறுத்தி தொழிலாளர்கள்...
 8. வணிகம்
  மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் யூலிப்கள்: எது சிறந்தது?
 9. நாமக்கல்
  2024ல் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்: பாஜ துணைத்தலைவர் தகவல்
 10. உலகம்
  ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் ரஷ்ய விண்வெளி வீரரை அழைத்துச் செல்கிறது