/* */

6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து

6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்தில் உள்ளது.

HIGHLIGHTS

6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் அரசு கவிழும் ஆபத்து
X

இமாச்சல பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது. அதேபோல, 3 சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் இம்மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே அரசுக்கு எதிராக செல்பட்டதாக கூறி, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா என 6 எம்எல்ஏக்களும் தற்போது மத்திய அமைச்சர் அணுராக் தாக்கூர் மற்றும் பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிந்தல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.

இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆஷிஷ் சர்மா, ஹோஷியார் சிங், கே.எல்.தாக்குர் ஆகியோரும் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில், "நாங்கள் பாஜகவில் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் பழிவாங்கப்படுகிறோம்" என்று கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த 2022ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட முடிவெடுத்து கட்சியை அணுகியிருந்தனர். ஆனால், கட்சி அவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளனர். இந்த அரசியல் மாற்றம் குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங், "சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்க கூடாது. அவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்று நடந்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பணம் விளையாடியிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது விசாரணைக்குரிய விஷயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் சேர்த்து ஜூன் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 March 2024 4:53 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்