/* */

நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக அடுத்த கட்ட தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக அடுத்த கட்ட தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக அடுத்த கட்ட தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?
X

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி தொகுதியிலும் மேலும் வட மாநிலங்களில் சில தொகுதிகள் என மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் போது வெப்ப அலை காரணமாக வாக்குப்பதிவு செய்வதற்காக வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்று வட மாநிலங்களிலும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஜனநாயக கடமை ஆற்ற வந்த பலர் தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த கட்ட அதாவது இரண்டாவது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ளது .இதில் நமது அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களின் தொகுதிகள் அடங்கும். இந்த நிலையில் தான் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது .

ஆனால் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு நூறு சதவீத வாக்களிப்பை பதிவு செய்வதற்கு கட்டாயம் எல்லாரும் வெளியே வந்து தான் ஆக வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்களிப்பதற்காக வெளியே வரும்போது வெப்ப அலை தாக்கி மரணம் அடைந்து விட்டால் அதற்கு யார் பொறுப்பாவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட தேர்தல்களை வெப்ப அலை தாக்குதல் முடிந்த பின்னர் வைத்துக் கொள்ளலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஆலோசனை முடிவில் தான் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக வெளியே வரும் மக்கள் குறிப்பாக மூத்த குடி மக்கள் தங்களது இன்னுயிரை இழக்காமல் இருந்தால் சரி. அதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எடுத்து ஆக வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Updated On: 22 April 2024 7:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...