/* */

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

HIGHLIGHTS

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்
X

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது.

இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்' என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது. ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

இதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.

இதைத் தவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 4 Jan 2024 3:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...