/* */

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு விட்டன.

HIGHLIGHTS

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்
X

அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடந்து வரும்  மீட்பு பணி.

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச - சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 33 அடித்து செல்லப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளில் தீவிரமாக வருகின்றன. நிலச்சரிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு கூறுகையில், "ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை பராமரிக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அருணாசல பிரதேசம் சீன எல்லையில் உள்ள ஒரு முழுமையான இந்திய மாநிலம் ஆகும். ஆனால் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தனது நாட்டின் வரைபடத்தில் கூட அந்த பகுதிகளை சேர்த்து அவற்றிற்கு தனியாக பெயரும் சூட்டி உள்ளது. ஆனால் அந்த பகுதிகள் இன்று வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 April 2024 12:12 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு