கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு

CUET Entrance Exam Date -ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு
X

CUET Entrance Exam Date - இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் மாதம் 4,5,6,7,8,10 ஆகிய நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வாய்ப்பாக இந்த நுழைவுத் தேர்வு இருப்பதால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்வதற்கும், விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் வரும் 24ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, இணையதள முகவரி மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை ஜூன் 24, 2022 வரை, அதாவது நாளை இரவு 11:50 மணி வரை சமர்ப்பிக்கலாம். CUET தேர்வுக்கு ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் நாளை இரவு 11:50 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை திருத்தம் செய்து திருத்திக்கொள்ளலாம்.

இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படவுள்ளது. தற்போது வரை தேர்வுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 43 மத்திய பல்கலைக்கழகங்கள் 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படவுள்ளது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-23T16:05:53+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்