உணவு பொருட்களை பாதுகாக்கும்; உடல் நலத்தை மோசமாக்கும் - உங்க வீட்டுல பிரிட்ஜ் இருக்கா?

பிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்தால், சில நாட்களுக்கு கெட்டு போகாது. ஆனால், அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது, நமது உடல் நலம், மிக மோசமாக கெட்டுப்போகும். இதுதான் உண்மை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உணவு பொருட்களை பாதுகாக்கும்; உடல் நலத்தை மோசமாக்கும் - உங்க வீட்டுல பிரிட்ஜ் இருக்கா?
X

பிரிட்ஜில் உணவுகளை வைத்து, எடுத்து சாப்பிட்டால், உடல் நலத்தை கெடுக்கும்.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உணவு பதப்படுத்துதல் என்பது சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, அனைவரது வீட்டிலும் ப்ரிட்ஜ் என்பது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதன் பக்க விளைவுகள் அறியாமல், மீதமான உணவு பொருட்களை ப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறோம். உணவினை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் அதனுடைய இயற்கை தன்மை மாறி புட் பாய்சனிங்கில் தொடங்கி இதயநோய், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுத்து உயிருக்கே உலை வைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடும் என்று தற்போதைய மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. அதன் அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ள இந்த 8 வகை உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் எப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

சிக்கன்

பொதுவாகவே அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருட்களில் முதல் இடத்தில் இருப்பது கோழி இறைச்சியாகும். இந்தக் கோழி இறைச்சியில் அளவுக்கு அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. பொதுவாகவே புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அது ஜீரணமாக வெகுநேரமாகும். புரோட்டின் அதிகம் நிறைந்த இந்த சிக்கனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது சிக்கனில் உள்ள புரதச்சத்து பன்மடங்கு அதிகரித்து,புட் பாய்சனை ஏற்படுத்தி விடும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் சிக்கனை மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட் சத்துக்கள் உள்ளது. இந்த பீட்ரூட்டை மீண்டும் சூடு படுத்தும்போது அதன் இயற்கை பண்பு மாறி, அதாவது நைட்ரேட் என்னும் வேதிப்பொருள் நைட்ரைட் என்னும் விஷமாக மாறி உயிருக்கே உலை வைக்கும்.

கீரை வகைகள்

பீட்ரூட்டை போன்றே கீரைகளிலும் அதிக அளவு நைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளது.கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதால் அதிலுள்ள நைட்ரேட் நைட்ரைட்டாக மாறி புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுப்பதோடு,அதிதீவிர புட் பாய்சனாக மாறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

முட்டை

சிக்கனைப் போன்றே முட்டையிலும் அதிகளவு புரோட்டின் நிறைந்துள்ளது. வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தினால் அது விஷமாக மாறும். மேலும் இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதோடு, பல்வேறு வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே முட்டையை எக்காரணம் கொண்டும் ஒரு முறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிட கூடாது.

காளான்

சைவ பிரியர்களுக்கான ஓர் அசைவ உணவு என்னவென்றால் அது காளானை கூறலாம்.காளானில் அதிக அளவு புரோட்டின் உள்ளது.இதனை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் பொழுது அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காளானை பொருத்தமட்டில் சமைத்த உடனே சாப்பிடுவது நல்லது.

அரிசி சாதம்

அனைவரும் உணவாக எடுத்துக் கொள்ளும் இந்த அரிசி சாதத்தை ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் அதன் இயற்கை பண்பு மாறி நச்சுத்தன்மை அதிகரித்து புட் பாய்சனை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு.அப்படி செய்யும்போது சமைத்த உருளைக் கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன.இதன் காரணமாக உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தினால், நச்சுத்தன்மை உள்ளதாக மாறிவிடும் வாந்தி, குமட்டல், போன்ற பல உடல் நல பாதிப்பு ஏற்படும்.

சமயைல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும் அதை திரும்பத் திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது,அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.இது புற்றுநோய்,இதய நோய்கள் ஏற்பட காரணமாக அமையும். பலகாரம் செய்த அல்லது அப்பளம் போன்ற உணவுப் பொருட்களை பொரித்த எண்ணையை உடனடியாக பயன்படுத்தி விடுவது நல்லது.

Updated On: 30 Dec 2022 4:16 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
 2. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 3. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 4. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 6. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 7. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 8. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 9. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 10. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்