பல்லு நல்லா இருக்கணுமா..? அப்ப டாக்டர் சொல்றதை கேளுங்க..!
பல் இருந்தால் மட்டுமே நம்மால் வார்த்தைகளை முறையாக உச்சரிக்க முடியும்.அதனால் பல் பராமரிப்பு முக்கியம்.
HIGHLIGHTS

டாக்டர். தினேஷ் குமார்.
பல்லு போனா சொல்லு போச்சு..என்பார்கள். பல் அமைப்பை பொறுத்தே வார்த்தைகளின் உச்சரிப்பும் அமையும். அந்த வகையில் பல் எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொள்ள முடியும். பல் பராமரிப்பு, குழந்தைகளுக்கு வரும் பல் பிரச்னைகள், பல் கூச்சம், பல் சொத்தை ஏற்படுதல், பல் பழுப்பு நிறமாக இருப்பது ஏன்? போன்றவைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் டாக்டர்.தினேஷ்குமார் நம்மோடு பேச உள்ளார். வரும் 28ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பல் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக நம்மோடு கலந்துரையாடுகிறார்.
டாக்டர்.தினேஷ்குமார் 2007ம் ஆண்டு அவரது BDS இளநிலை பல் மருத்துவ படிப்பை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். அதைத்தொடர்ந்து முதுநிலை படிப்பான MDS Prosthodontics-ஐ 2011ம் ஆண்டு ஸ்ரீ விநாயகா மிஷன் பல்கலையில் முடித்தார். அவர் ஈரோடு IDA -விலும், Indian Prosthodontic Society- போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
தற்போது குமாரபாளையம், JKKN பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பேராசிரியராக பணியில் இருக்கிறார். அனுபவம் வாய்ந்த அவரது திறமைகள் இந்த சமூகத்துக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அவர் எமது அழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.