தமிழகத்தில் 17ம் தேதி 9,344 பேருக்கு கொரோனா, 39 பேர் இறப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 39 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் 17ம் தேதி 9,344 பேருக்கு கொரோனா, 39 பேர் இறப்பு: சுகாதாரத்துறை
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,344 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 39 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 13,071 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,02,022 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

தற்போது மருத்துவமனையில் 65,635 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2021-04-18T09:56:52+05:30

Related News