/* */

சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

பிரதமர் மோடி வரும் போது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முன் வர வேண்டும் என்றார்.

HIGHLIGHTS

சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்து பிரதமர் மோடி  பேச வேண்டும்: காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்
X

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர்

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து விருதுநகரில் பேச உள்ள பிரதமர் மோடி சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்தும் பேச வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், ராஜீவ்காந்திக்குப் பிறகு 2வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். மோடியை நாங்கள் வரவேற்கிறோம். மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதமர் வருகை இருக்க வேண்டும். மேலும் சிவகாசி பட்டாசு பிரச்னை குறித்தும் மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை பிரதமர் மோடி பேச நேரம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி வருகையையொட்டி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேலும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து மத்திய அரசிடம் கேட்டால் ஜப்பானின் 90 சதவீத கடனால் நடைபெறுகிறது என பதில் வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜப்பான் பிரதமரிடம் தான் கேட்க வேண்டுமே தவிர பாரத பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டியதில்லை என்றார். மேலும் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு நம்முடைய பிரதமர் அவரின் பணியை முடித்து கொண்டார்.மேலும் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வருகிறார். அவர் வரும் போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக உள்ளார். தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது இதுவே முதல்முறை. தவறு செய்யவில்லை எனில் சட்டத்திற்கு முன் அவர் வந்து நிற்க வேண்டும். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரைக் காப்பாற்ற பஜக துணைநிற்கும் என்றால் அது தவறு. ஒரு நாள் அவருக்கு தண்டனை உண்டு என காங்கிரஸ் கட்சி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்சியில் நகர தலைவர் வெயிலு முத்து, இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் பஞ்சாயத்து ராஜ் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Updated On: 2 Jan 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!