/* */

விநாயகர் சதுர்த்தி விழா: விருதுநகர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு, அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாளை விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமையில்; நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

விநாயகர் சதூர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லைல். பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விநாயகர் சதூர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 9:52 AM GMT

Related News