/* */

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
X

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை மீன் வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் கலந்து கொள்ள 360 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு சுற்றிலும் 40 காளைகளும், 25 வீரர்களும் களத்தில் இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சிறந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பள்ளபட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 May 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...