/* */

தொண்டர்களை மதிக்கக் கூடிய கட்சிதான் அதிமுக :முன்னாள் அமைச்சர்பேச்சு

Rajapalayam ADMK Meeting இராஜபாளையம் அதிமுக வடக்கு ஒன்றியம் கழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 பிறந்தாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினர்.

HIGHLIGHTS

தொண்டர்களை மதிக்கக் கூடிய கட்சிதான் அதிமுக :முன்னாள் அமைச்சர்பேச்சு
X

அதிமுக கூட்டத்தில் பேசுகிறார் ,முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி.

Rajapalayam ADMK Meeting

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , 76- வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் பால் வளத்து துறை அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி, தலைமை கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

பொதுக்கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் கட்சி தொண்டர்கள் ஈடுபாடுடன் உள்ளனர். கிளைக் கழக செயலாளர் பெயர் குறிப்பிடவில்லை என்றால் கூட உரிமையோடு கேட்கின்றனர். நம் கட்சியில் அனைவரும் உள்ளனர். ஸ்டாலின் கூட நாம் கட்சியில் உள்ளார் என நகைச்சுவையாக பேசினார் .

எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவரை கோமாளி, ஏமாளி மலையாளி என கலைஞர் பேசினார். எம்ஜிஆர் இருக்கும் வரை கலைஞரால் முதல்வராக முடியவில்லை.அண்ணா திமுக தலைமையில் தான் கூட்டணி தனித்து நிற்போம் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி கூறினார். தனித்து நிற்கின்றோம் தேர்தல் தேதி அறிவித்தால் திமுக கூடாரம் காலி ஆகும் எங்களிடம் தேமுதிக பாமக சரத்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள். இராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிக்காக அடிக்கல் நாட்டியது நான், நிதி ஒதுக்கியது நான்.நாங்கள் பணிகளை எல்லாம் முடித்து வைத்து நிலையில், பாலத்தில் கல்வெட்டு வைக்கின்றனர். நாங்கள் பெத்த பிள்ளைக்கு, பெயர் வைக்க நீங்கள் யார் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வெட்டை அடித்து நொறுக்குவோம் என ஆவேசமாக பேசினார்.

இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நாங்கள் தான். கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரியை முதல் கல்லூரியாக கொண்டு வந்து அனைத்து பணிகளையும் நாங்கள் முடித்தோம். ஆனால், அவர்கள் வந்து திறந்து வைத்து பெயர் வாங்கிச் சென்றனர்.

திமுகவினர் பீகார் காரனிடம் மூளையை அடகு வாங்கி அவர்கள் சொன்ன வாக்குறுதி நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். நமக்கு கட்டம் சரியில்லை ஆகையால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். அண்ணா திமுக யாராலும் அழிக்க முடியாது அண்ணா திமுகவுக்கு அழிவே கிடையாது .

மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளை அடித்து அவர்கள் பெயரை கல்வெட்டில் வைத்து விட்டார்கள். நாங்கள் அடிக்கல் மற்றும் நிதி ஒதுக்கிய கல்வெட்டு வைக்க வேண்டும் என, அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம். அதிகாரிகள் கல்வெட்டை வைத்தார்கள் .

மத்தியில் ஆளுகின்ற ஆட்சி அதிமுகவை பார்த்து பயப்படுகிறது அந்த அளவுக்கு ஆளுமை தன்மையுடன் எடப்பாடி செயல்படுகிறார்.

விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆட்சிக்கு வந்த பின் எடுப்போம் இப்பொழுது எடுத்தால் நமது மீது வழக்கு போடுவார்கள். நான் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஓடிப் பார்த்தேன் விடாமல் என் மீது வழக்கு போட்டு விரட்டினார்கள்.

மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஓட்டு வாங்கிய கட்சி திமுக நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறினார்கள். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யவேன் என, கூறிவிட்டு இன்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .

எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்துக்கு வெளியே கேள்வி கேட்கிறார். அம்பது லட்சம் கையெழுத்து வாங்கி என்ன செய்யப் போகிறார்கள் கேட்டதற்க்கு அதற்கு அவர்கள் வாங்கிய கையெழுத்தை கே.டி.ஆர் ஆகிய என்னிடம் கொடுப்பதாக கூறியுள்ளார்கள். அதற்கு ,எடப்பாடி கேள்வி கேட்டார் உன்கிட்ட கொடுக்க போறதா சொல்றாங்களே என்ன என்று என்கிட்ட கேட்டார் .அதற்கு நான் கூறினேன் கையெழுத்து வாங்கின மனுவை என்னிடம் கொடுத்தால், நான் உங்ககிட்ட கொடுப்பேன் நீங்க ஆட்சிக்கு வந்து அதை பரிசிலனை செய்யுங்கள் என கூறினேன் . நகைச்சுவையாக பேசினார்

எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். திமுக அமைச்சர்கள் சொன்னால் செய்கிறாரே இல்லையோ எடப்பாடி சொன்னால் உடனடியாக செய்கின்ற முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் இருக்கிறார்.

அண்ணா திமுக கட்சி ஆரம்பித்த தே திமுகவை அழிப்பதற்காகத்தான் திமுக அதிமுக ஒழிக்க பார்க்கிறது முடியாது எடப்பாடி என்ற பொதுச் செயலாளர் கையில் அதிமுக உள்ளது .

அதிமுக வேற நபர்களிடம் சென்றிருந்தால், திமுகவின் கைப்பவையாகா செயல்பட்டு இருப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் தமிழர்கள் நலனுக்காக டெல்லியில் குழு கொடுக்க முடியும்

கண்டா வரச் சொல்லுங்க எங்க ஊரு எம்பியை கண்டா வரச் சொல்லுங்க கண்டா வரச் சொல்லுங்க எங்க ஊரு எம்பி கண்டா வரச் சொல்லுங்க இந்த பாடல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் பரப்பி வருகிறது. ஏனென்றால், தமிழகத்தில் உள்ள 39 எம்பிகள் காணவில்லை. ஆகையால், பொதுமக்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினருக்கு வாக்களிக்க வேண்டும்

மத்தியில் ஆளுங்கட்சியே அதிமுகவை பார்த்து பயப்படுகிறது .தேர்தல் தேதி அறிவித்தால், திமுக கூடாரம் காலியாகும் என பேசினார்.

Updated On: 27 Feb 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...