/* */

தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந்தேதிக்குள் செலுத்த அதிகாரி வேண்டுகோள்

தொழிலாளர்களுக்கான நல நிதியை வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந்தேதிக்குள்  செலுத்த அதிகாரி வேண்டுகோள்
X
தொழிலாளர் நலத்துறை அலுவலகம் (கோப்பு படம்).

2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5-ம் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார்.

தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி வருவாய் வரிவசூல் சட்டத்தின் கீழ் அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநிதி தொகையை ஜனவரி 31-ந் தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600 006 என்ற முகவரிக்கு The Secretary, Tamil Nadu Labour Welfare Board, Chennai- 600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை, காசோலையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Dec 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  2. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  3. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  8. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!