/* */

குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

HIGHLIGHTS

குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி
X

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் எழிலரசி (வயது 40). இவர்கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 17-ந் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகவே 21-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை எழிலரசி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் எழிலரசியின் படத்தை வைத்து மருத்துவமனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது வரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கு 4 டாக்டர்களும், 6 செவிலியர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு