/* */

போளூர் மார்க்கெட் கமிட்டியில் இட நெருக்கடி: நெல் மூட்டைகள் எடுத்துவர தடை

போளூர் மார்கெட் கமிட்டியில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

போளூர் மார்க்கெட் கமிட்டியில் இட நெருக்கடி: நெல் மூட்டைகள் எடுத்துவர தடை
X

போளூர் மார்க்கெட் கமிட்டியில் குவிந்துள்ள நெற்பயிர்கள்

போளூர் மார்க்கெட் கமிட்டிக்கு டோக்கன் இல்லாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளை எடுத்து வர வேண்டாம் என கமிட்டி கண்காணிப்பாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மார்க்கெட் கமிட்டிக்கு தினமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரத்திற்கும் மேல் நெல் மூட்டைகள் வரை விற்பனைக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனர். இதனால் கமிட்டியில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் திணறி வருகின்றன.

இதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் நெல் மூட்டைகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரத்திற்க்கும் மேல் நெல்வரத்து தொடங்கியுள்ளது. மேலும் விடுமுறை தினம் தொடர்ந்து வந்ததால் சிக்கல் இருந்து வருகிறது.

இதனை சமாளிக்க போளூர் மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் தாமோதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

போளூர் மார்க்கெட் கமிட்டியில் அனைத்து கிடங்கு விவசாயிகளின் நெல் மூட்டைகள் விற்பனைக்காக நிரம்பி உள்ளது. அடுத்த வரும் இரண்டு வாரங்களுக்கு மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி நெல் மூட்டைகளை திறந்தவெளியில் இறக்கி வைக்க அனுமதி இல்லை, மேலும் இரண்டு நாட்களுக்கு எடை போட தேவையான அளவுக்கு நெல் மூட்டைகள் இருப்பு உள்ளது. எனவே நெல் மூட்டைகளை இனி மேல் நேரடியாக எடுத்து வருவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக முன்பதிவு செய்து டோக்கன் பெற்று நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அலுவலக நேரத்தில் காலை 11:30 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் பெற்றுச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டோக்கனில் குறிப்பிட்டப்படும் நாளில் குறிப்பிட்டப்படும் கிடங்கில் மட்டுமே நெல் மூட்டைகளை இறக்கி வைக்க அனுமதிக்கப்படுவார்கள்.

நெல் மூட்டைகளை எடுத்து வரும்போது பெயர், ஊர், நெல் ரகம், செல்போன், எண் மற்றும் ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை விவசாயிகள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Sep 2023 7:30 AM GMT

Related News